தீபாவளியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
Published on: 

சென்னை,

தீபாவளி திருநாளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தீபாவளி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவில்களுக்குச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

பழனி முருகன் கோவில்

அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

ஒருவழிப் பாதை

மலைக்கோவிலில் நெரிசலைத் தவிர்க்க குடமுழுக்கு நினைவு மண்டபம் வழியாக ஒருவழிப் பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடித்தவர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் திருஆவினன்குடி கோவிலில் உள்ளூர் பக்தர்கள் நெய் தீபம் மற்றும் அகல் விளக்குகள் ஏற்றி முருகப்பெருமானை வழிபட்டனர்.

X