பங்குனி உத்திரத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

நாளை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குனி உத்திரத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்
Published on

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் நாளை பங்குனி உத்திரம் என்பதால், திருத்தணி கோவிலுக்கு இன்றே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாகவே காட்சியளிக்கிறது. அவர்கள் பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com