திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காத்திருப்பு கூடத்தில் காத்திருந்த பக்தர்கள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காத்திருப்பு கூடத்தில் காத்திருந்த பக்தர்கள்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். நேற்று பகலில் திருவண்ணாமலையில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர், மோர் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் தினமும் 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை காணமுடியும். ஆனால் நேற்று பகலில் வெயில் கொளுத்தியதன் காரணமாக பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com