அகரம் முத்தாலம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

501 கலச பூஜைகளுடன் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
வருஷாபிஷேக விழா யாகசாலை பூஜை
வருஷாபிஷேக விழா யாகசாலை பூஜை
Published on

திண்டுக்கல்,

தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுரலிங்கேஸ்வரர், ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மங்கள துர்க்கை, நவக்கிரங்கள், பூத ராஜா மற்றும் பூத ராணி ஆகிய பரிவார தெய்வங்கள் எழுந்தருள் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் முடிந்து ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (8.3.2026) காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மூர்த்தி மூல மந்திரம், நவக்கிர ஹோமம், மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. பின்பு காலை 10 மணிக்கு மேல் 501 கலச பூஜைகளுடன் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com