திண்டுக்கல்: கோபால்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா

பக்தர் ஒருவர் 6 அடி நீள அலகு குத்தி, பிரம்மாண்டமான அலங்காரத்துடன் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
6 அடி நீள அலகு குத்தி தீச்சட்டி ஏந்தி வந்த பக்தர்
6 அடி நீள அலகு குத்தி தீச்சட்டி ஏந்தி வந்த பக்தர்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. அப்போது பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். அதனை தொடர்ந்து விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு அலங்கார ஜோடனை செய்து அதிர்வேட்டு முழங்க மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டார். அப்போது பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.

இன்று காலை பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு பக்தர் 6 அடி அளவில் நீளமான அலகு குத்தி, அம்மன் சிரசுகள் கொண்ட பிரம்மாண்டமான அலங்காரத்துடன் தீச்சட்டி ஏந்தி வந்து அம்மனை வழிபட்டார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கிடாவெட்டு, பொங்கல் வைத்தல் நடைபெற்றது.

விழாவில் கோபால்பட்டி, கணவாய்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com