திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்

நிகும்பலா யாகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
அங்காள பரமேஸ்வரி அம்மன்
அங்காள பரமேஸ்வரி அம்மன்
Published on

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே அனுமந்த நகர் ராஜலட்சுமி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. உலக மக்களின் நன்மை மற்றும் தொழில் வளர்ச்சி வேண்டி இந்த கோவிலில் நிகும்பலா யாகம் நடைபெற்றது.

இந்த சிறப்பு யாகத்தை முன்னிட்டு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் அனுமந்த நகர், பாலகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Also Read
பக்தர்களுடன் நெருக்கமாக உரையாடும் பெருமாள்
அங்காள பரமேஸ்வரி அம்மன்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com