

இந்து கோவில்களுக்கு செல்லும்போது அங்கு பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் மதிப்பது மிகவும் அவசியமாகும். அறியாமல் செய்யப்படும் சிறு தவறுகள்கூட அந்த தலத்தின் புனிதத்தன்மையைக் குலைப்பதாகவும், அவமதிப்பாகவும் ஆகிவிடும்.
எனவே, கோவிலுக்கு செல்வது அர்த்தமுள்ளதாகவும் இறைவனின் அருளை பெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அமைய அந்தந்த கோவில் சார்ந்த மரபுகளை கடைப்பிடிக்கவேண்டும். அவ்வகையில் பொதுவாக இந்து கோவில்களில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் வருமாறு:-
* கோவிலில் தூங்கக் கூடாது.
* விளக்கு இல்லாதபோது (எரியாத பொழுது) வணங்க கூடாது.
* அபிஷேகம் நடக்கும்போது கோவிலை சுற்றி வரக்கூடாது.
* குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது.
* கோவிலில் எந்த முர்த்திகளையும் தொட்டு வணங்கக்கூடாது.
* கோவில் வளாகத்தில் மனிதர்களின் காலில் விழுந்து வணங்க கூடாது.
* கோவில் படிகளில் உட்காரக் கூடாது.
* மண் விளக்குகளை கழுவி சுத்தம் செய்யாமல் அதில் விளக்கேற்றக்கூடாது.
* கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக் கூடாது .
* கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக் கூடாது.
* கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
* தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது.
* கோவிலில் வைத்து எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.