கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றம்

கண்டதேவி கோவில் ஆனி திருவிழவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 08.07.2025 அன்று காலை நடைபெறும்.
தேவகோட்டை அருகே ராமாயண வரலாற்று சிறப்பும் இலக்கிய சான்றும் பெற்ற கண்டதேவி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆனி மாத தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும். உஞ்சனை, தென்னிலை, செம்பொன்மாரி, இரவுசேரி நான்கு நாட்டார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இத்தேரோட்டத் திருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கடந்த ஆண்டு தேர் புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தேரோட்ட விழாவிற்கு கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
முன்பாக கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழா நாட்களில் கேடயம், ரிஷபம், பூதம், அன்னம், யானை, மயில், மூஞ்சூறு, பல்லக்கு போன்ற வாகனங்களில் சுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 08.07.2025 அன்று காலை நடைபெறும்.






