காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

ரோஸ் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து கருட வாகனத்தில் அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளினார்.
கருட சேவை
கருட சேவை
Published on

காஞ்சிபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில் விழாவின் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ரோஸ் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய பகவான், வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவிலில் இருந்து புறப்பட்ட கருட சேவை, ரங்கசாமி குளம், டி.கே.நம்பி தெரு, செட்டி தெரு, வரதராஜ பெருமாள் மாடவீதி வழியாக வலம் வந்தது. அப்போது பக்தர்கள் தீபாராதனை காட்டி பகவானை வழிபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com