ஜனவரி 2026: திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்கள்

ரத சப்தமியை முன்னிட்டு பத்மாவதி தாயார் 7 வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சானூர் பகுதியில் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் உள்ளூர் கோவில்களில் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பல்வேறு சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
பலராமகிருஷ்ணர் கோவிலில் ஜனவரி 1 மற்றும் 28-ந்தேதிகளில் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு இரவு 7 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணர் திருச்சி வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 2, 9, 16, 23 மற்றும் 30-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது.
10-ந்தேதி அஸ்த நட்சத்திரம், 15-ந்தேதி சங்கராந்தி திருநாள் ஆகியவற்றை முன்னிட்டு சூரியநாராயண சுவாமி மாலை 5 மணிக்கு திருச்சி வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பத்மாவதி தாயார் கோவில்
19-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் மாலை 6.45 மணிக்கு கஜ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
25-ந்தேதி ரத சப்தமி விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் கோவிலில் காலை 7 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை வாகன சேவை நடைபெறுகிறது. தாயார் 7 வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதேநாளில் ரத சப்தமி விழாவையொட்டி சூரியநாராயண சுவாமி காலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
24-ந்தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ சுவாமி மாலை 6 மணிக்கு திருச்சி வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






