ரூ.17 லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்


ரூ.17 லட்சத்தில் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பழமையான ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருநாளன்று மட்டும் ஆலயத்துக்கு வரும் பக்தர்களிடம் புத்தம்புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று, விநாயகரை அலங்கரித்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு 18-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் குப்புசாமி, செயலாளர் ஜெகன்னாதன்,பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இது குறித்து ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் குப்புசாமி கூறுகையில், "ஆண்டுதோறும் பக்தர்களிடம் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகளை பெற்று அதனை விநாயகருக்கு அலங்கரித்து தீபாராதனைகள் நடத்துவோம். யார், யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை கணக்கு வைத்துக் கொண்டு அத்தொகையை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவோம். இந்த ஆண்டு மொத்தம் ரூ.17 லட்சம் மதிப்பில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story