மதுக்கூர் பகுதியில் கந்தூரி விழா தொடங்கியது

ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் கந்தூரி விழாவில் மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பகுதியில் அமைந்துள்ளது மஹான் ஷேக் ஃபரீத் வலியுல்லாஹ் தர்கா. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு ரஜபு மாதப் பிறை துவங்கிய நிலையில், நேற்று மாலை கொடியேற்றத்துடன் கந்தூரி திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். மதுக்கூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருகின்ற 05.01.2026 (திங்கள் கிழமை) அன்று மாலை கந்தூரி விழா நடைபெற உள்ளது. விழாவில் மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






