காயல்பட்டினத்தில் கந்தூரி விழா


காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
x

கந்தூரி விழா நாட்களில் தினசரி இரவு சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது.

தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் லெப்பப்பா மகான்களின் கந்தூரி விழா 5 நாட்கள் நடைபெற்றது. விழாவில் குர்ஆன் முற்றோதுதல், மகான்களின் புகழ் பாடுதல், தியான வழிபாடு ஆகியவை நடந்தன.

மேலும் தினசரி இரவில் சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது. மஹ்ழரா அரபிக் கல்லூரி முதல்வர் செய்யது அப்துர் ரகுமான், பேராசிரியர் முகம்மது அஸ்பர், பெரிய குத்பா பள்ளியின் கத்தீபு அகமது அப்துல் காதிர், பெரிய சம்சுத்தீன் ஜும்மா பள்ளி கத்தீபு அபூ மன்சூர், சிறிய குத்பா பள்ளி கத்தீபு முகம்மது முகைதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

விழாவின் நிறைவில் நேர்ச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லெப்பப்பா பண்ணை தலைவர் ஹாஜி ரஹ்மத்துல்லாஹ், முகைதீன் பள்ளி செயலாளர் பாரூக், வங்காளம் அப்துல் லத்தீப், முகம்மது அலி ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story