கன்னியாகுமரி: விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையைத் தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.
திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சன்னதி தெருவில் விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடந்தது.

மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

விளக்கு பூஜையைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு முதல் சாம அபிஷேக பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் சாம அபிஷேக பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மூன்றாம் ஜாம அபிஷேக பூஜையும், அதிகாலை 2 மணிக்கு நான்காம் சாம அபிஷேக பூஜையும் நடந்தது. இந்த நான்கு சாம அபிஷேக பூஜையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Also Read
கன்னியாகுமரி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா
திருவிளக்கு பூஜை
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com