கார்த்திகை தீபத்திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகை தீபத்திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
Published on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. சுவாமி ஜெயந்திநாதருக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது.

பின்னர் மகா மண்டபத்தில் உள்ள விநாயகர், மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6.55 மணியளவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com