கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளான இன்று கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடந்தது.
கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாள் விழாவையொட்டி இன்று காலை 10 மணி அளவில் ரிஷப வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் பக்தர்கள் வெள்ளத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து அருள்பாலித்தனர்.

வெள்ளி தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்க இருக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து வெள்ளை யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறும். இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com