இரணியல் சுற்றுவட்டார பகுதிகளில் 21-ம் தேதி காவடி திருவிழா: போக்குவரத்து மாற்றம்

பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர் ஆலயத்தில் காவடி பூஜை வைத்து வழிபாடு
இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர் ஆலயத்தில் காவடி பூஜை வைத்து வழிபாடு
Published on

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி மாத திருவிழா வருகிற 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை முன்னிட்டு இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருக பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து பல்வேறு வகையான காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.

இரணியல் மேலத்தெரு, கீழத்தெரு, செக்காலத்தெரு, பட்டாலியர் தெரு, ஆசாரி தெரு மற்றும் தலக்குளம், திங்கள் நகர், குளச்சல், புதுக்கடை போன்ற ஊர்களில் இருந்து புஷ்ப காவடி, வேல் காவடி, எண்ணெய் காவடி, பறக்கும் காவடி, தேர் காவடி என்று பல்வேறு வகையான காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர்.

காவடிகளுக்கு உரிய பூஜை வைத்து வழிபாடு நடக்கிறது. இதனை காண திங்கள் நகர் இரணியல் சந்திப்பு அருகே பெருமளவில் பொதுமக்கள் திரளாக வருகை தருவார்கள்.

எனவே குளச்சல் போக்குவரத்து போலீசார் மற்றும் இரணியல் போலீசார் சார்பில் திங்கள் நகர் முதல் இரணியல் வழியாக தோட்டி கோடு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com