கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் கீழப்பாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் (சிவன்) கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.

இதையடுத்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதையடுத்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவில் விமானம், மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கீழப்பாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com