திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 25-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 25-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
x

பாரம்பரிய முறைப்படி நடைபெறும் தூய்மைப்பணி நிறைவடைந்த பின் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 25-ம் தேதி (வியாழக்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை பாரம்பரிய முறைப்படி இப்பணி நடைபெறும். கோவில் ​​கருவறை, சுவர்கள், கூரை, பூஜை பொருட்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படும். பின்னர் நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.

இந்த புனித தூய்மைப்பணி நிறைவடைந்த பிறகு, காலை 9.30 மணி முதல் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

1 More update

Next Story