மாரண்டஅள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி -தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி
வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திருநீர், இளநீர், சந்தனம், குங்குமம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

சுப்பிரமணிய சுவாமி, வள்ளி -தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com