ஆறுமுகநேரியில் பா.ஜனதா நடத்திய பிரமாண்ட குபேர பூஜை

குபேர பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
குபேர பூஜையில் பங்கேற்ற பெண்கள்
குபேர பூஜையில் பங்கேற்ற பெண்கள்
Published on

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றியங்கள் வாரியாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 4,008 குபேர பூஜை, குத்துவிளக்கு பூஜை நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக உடன்குடி ஒன்றியம் குலசேகரபட்டினத்தில் கடந்த 15-ந் தேதியும், 2-வது கட்டமாக கடந்த 17-ந்தேதி திருச்செந்தூரில் குபேர பூஜை நடந்தது.

இந்நிலையில், 3-வது கட்டமாக திருச்செந்தூர் ஒன்றியம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதி பெண்கள் பங்கேற்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் உள்ள துரைராஜ் நாடார் தோட்டத்தில் 4008 குபேர பூஜை விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது.

தொடக்க விழாவிற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேதுபதி திரைப்பட நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு குபேர பூஜை விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீ தியாகராஜன் கலந்து கொண்டு குபேர பூஜை குறித்து விளக்கி பேசினார். இதில் 4,008 பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

குபேர பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் 43 பேரில், முதல் பரிசாக 1 பவுன் தங்க நாணயம், 2-வது பரிசாக 6 கிராம் தங்க நாணயம், 3-வது பரிசாக 4 கிராம் தங்க நாணயம், 4-வது பரிசாக 2 கிராம் தங்க நாணயம், 5-வது பரிசாக பிரிட்ஜ், 6-வது பரிசாக வாஷிங் மெஷின், 7-வது பரிசாக எல்.இ.டி, டிவி, 8-வது பரிசாக எலக்ட்ரிக் தையல் மெஷின், 9-வது பரிசாக ஆண்ட்ராய்டு போன். 10-வது பரிசாக வாட்டர் டிஸ்பென்சர் வழங்கப்பட்டது.

Also Read
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்
குபேர பூஜையில் பங்கேற்ற பெண்கள்

மேலும், 11 முதல் 20-வது வரை கிரைண்டர், 21 முதல் 30 வரை மிக்சி, 31 முதல் 43 வரை அயன் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பு கூடுதல் பரிசாக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதில், 10 பேருக்கு கிரைண்டரும், 10 பேருக்கு மிக்சியும் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக காயல்பட்டினத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்க ளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Also Read
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்
குபேர பூஜையில் பங்கேற்ற பெண்கள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com