குலசேகரன் பட்டினம் செய்யது சிராஜித்தின் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

குலசேகரன் பட்டினம் தர்காவில் கொடிப்பட்டம் ஊர்வலம்
குலசேகரன்பட்டினம் செய்யது சிராஜுத்தின் தர்ஹா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு பவனி ஜனவரி 3-ம் தேதி நடக்கிறது.
குலசேகரன்பட்டினம் துறைமுகக் கடற்கரையில் பழம் பெரும் குத்துபுல் அமீர் மௌலானா சேரா முஸ்லியார் செய்யது சிராஜுத்தின் தர்ஹாவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று மாலை தொடங்கியது.
இதையொட்டி தர்ஹாவில் இருந்து குதிரை பல்லக்கு மீது கொடி பட்டம் ஊர்வலமாக பவனி வந்து, இரவு 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து மஹ்ரிப் தொழுகைக்கு பின் துஆ ஓதி தப்ரூக் வழங்கினர்.
ஜனவரி 2-ம் தேதி வரை தினசரி இரவு 7 மணி முதல் 9 மணி வரை மௌலுது மற்றும் திக்று மஜ்லிஸ் நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி இரவு அஸர் தொழுகைக்கு பின் மௌலூது திக்ரு மஜ்லிஸ் இஷா தொழுகைக்கு பின் தப்ரூக் வழங்கப்படுகிறது. இரவு 11 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 1 மணிக்கு சந்தனம் பூசப்பட்டு அதிகாலை 3 மணிக்கு ஹத்தம் தமாம் செய்து அபூர்வ துவா ஒதி தப்ரூக் வழங்கப்படுகிறது.
ஜனவரி 3-ம் தேதி அஸர் தொழுகைக்கு பின் குர்ஆன் ஒதுதல், தொழுகைக்கு பின் தப்ரூக் வழங்கப்படுகிறது. இரவு 2 மணிக்கு தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு அலங்காரத்துடன் ஊர் பவனியும், 4ம் தேதி காலை 10 மணிக்கு கந்தூரி கமிட்டியின் சார்பாக வீடுதோறும் தப்ரூக் வழங்கப்படுகிறது. இரவு 3 மணிக்கு வாண வேடிக்கையைத் தொடர்ந்து ஹத்தம் தமாம் செய்து தப்ரூக் வழங்கப்படுகிறது.
ஜனவரி 5ம் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை விளக்கு ஏற்றுதல், 7-ம் தேதி மாலை 5 மணிக்கு கொடி இறக்கப்பட்டு தப்ரூக் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.






