வந்தவாசி கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
Published on

வந்தவாசி,

வந்தவாசியில் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சங்கல்பம், அங்குரார்ப்பணம், வேதபிரபந்தம், கும்ப ஆராதனம், ஹோமங்கள், சயனாதிவாஸம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றன.

நேற்று காலை கோபூஜை, புண்யாஹம், பூர்ணாஹுதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புனிதநீர் கலசங்களை பட்டாச்சாரியார்கள் கோபுர உச்சிக்கு கொண்டு சென்று கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com