மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் செப்டம்பர் 17-ந் தேதி கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் செப்டம்பர் 17-ந் தேதி கும்பாபிஷேகம்
Published on

மதுரை,

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவில் திகழ்கிறது. இங்கு. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங் கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி அன்று ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மண்டபம் முழுமையாக சேதமடைந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு ஆகம விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தி கோவில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.16.47 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீரவசந்தராயர் மண்டபத்தினை பழமை மாறாமல் முற்றிலும் புனரமைத்திடும் வகையில் ரூ.35.30 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலை மையில் சீராய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பராபவ ஆண்டு ஆவணி மாதம் 31-ந்தேதி (செப்டம்பர் 17-ந்தேதி) வியாழக்கிழமை அன்று காலை 7.45 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com