உலக மக்களின் நலன் வேண்டி ஆற்றழகிய சிங்கர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை


உலக மக்களின் நலன் வேண்டி ஆற்றழகிய சிங்கர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
x

தங்க கவசம் அணிந்து சேவைசாதித்த சிங்கப்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி

திருச்சி சிந்தாமணி, ஓடத்துறை காவிரி கரையில் எழுந்தருளியுள்ள ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏகதின லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக மக்கள் நலனுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை ஆற்றழகிய சிங்கப்பெருமாள் மூலமந்திரத்தை இடைவிடாது பாராயணம் செய்து, ஏகதின லட்சார்ச்சனையை நடத்தினர்.

இதில் தங்க கவசம் அணிந்து சேவைசாதித்த சிங்கப்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சகஸ்ர தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1 More update

Next Story