ஆறுபடை வீடு கொண்ட ஐயப்பன்

எருமேலியில் மகிஷியை ஐயப்ப சுவாமி வதம் செய்தார். இங்கு ஐயப்பன் தர்ம சாஸ்தாவாக காட்சி தருகிறார்.
ஆறுபடை வீடு கொண்ட ஐயப்பன்
Published on

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல, ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு.

பந்தளம்:- சபரிமலைக்குச் செல்லும் வழியில் உள்ளது பந்தளம். இங்கு ஐயப்பன், மணிகண்ட பாலகனாக நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இங்குள்ள விக்ரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

குளத்துபுழா:- பாலகனாக ஐயப்பன் காட்சி தருகிறார்.

எருமேலி:- இங்கு எருமை முகத்துடன் திரிந்த மகிஷியின் மீது நின்று அவளை வதம் செய்தார். இங்கு ஐயப்பன் வில், அம்புகளுடன் தர்ம சாஸ்தாவாக காட்சிதருகிறார். இங்கு ஐயப்பசாமியின் தோழர் வாவர் பள்ளிவாசல், கோட்டை கருப்புசாமி கோவில்கள் உள்ளன.

அச்சன்கோவில்:- இங்கு சுவாமி, வன அரசனாக காட்சி தருகிறார்.

ஆரியங்காவு:- இங்கு சாஸ்தா பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.

சபரிமலை: சபரி பீடமே சபரி மலையானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com