மதுரை சித்திரை திருவிழா... தங்கச் சப்பரத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.
தங்க சப்பரத்தில் உற்சவர்கள்  வீதிஉலா
தங்க சப்பரத்தில் உற்சவர்கள் வீதிஉலா
Published on

மதுரை,

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில வலம் வருவார்கள்.

சித்திரை திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலையில் தங்க சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் எழுந்தருளி மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 28-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம், 29-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com