மதுரை வீரன் கோவில் மண்டலாபிஷேக விழா

புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மண்டலாபிஷேக விழா
மண்டலாபிஷேக விழா
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, குறவன்குளம் கிராமத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவாக 48-ம் நாள் மண்டலாபிஷேக விழா நேற்று நடந்தது.

இதற்காக சிறப்பு யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள், மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com