மார்கழி மாதம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி முதல் நடைதிறப்பில் மாற்றம்

பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்பட உள்ளது.
மார்கழி மாதம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி முதல் நடைதிறப்பில் மாற்றம்
Published on

மதுரை,

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் வருகிற 16-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(ஜனவரி) 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் அதிகாலையில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்பட உள்ளது.

மேலும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் உச்சிக்கால பூஜை முடிந்து நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். இதை தொடர்ந்து மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9.30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் கோவில் நடைசாத்தப்படுகிறது. இந்த தகவலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com