குலம் செழிக்க மாசி அமாவாசை வழிபாடு

மாசி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும் என்றும் சொல்லப்படுகிறது.
தர்ப்பணம்
தர்ப்பணம்
Published on

மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வருவது மாசி மாத அமாவாசை.

மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை திதி கூடுதல் சிறப்பு பெறுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகியன மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மாசி மாத அமாவாசையும் தனிச்சிறப்பு வாய்ந்தது.

ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகிறது. மேலும், அமாவாசை திதியின் அதிபதி முன்னோர்கள்தான். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு சிறப்பு தூபம் காட்டி தியானம் மற்றும் அன்னதானம் செய்வது குடும்பத்திற்கு நல்லது.

ஒரு ஆண்டில் 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதன்படி மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் 15 நாட்கள் என 96 தர்ப்பணங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

அதில் மாசி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, விரதம் இருந்து முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆறு, குளம், கடலில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமானதாகும். முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மாலையில் குல தெய்வத்தை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

Also Read
குல தெய்வ சக்தியை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி?
image-fallback

மாலையில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் மனதை குளிர்வித்து அவர்களின் ஆசியை பெறுவதுடன் குலதெய்வத்தின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

அமாவாசை நாளில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதன்மூலம், தர்ப்பணம் கொடுப்பவரின் பாவம் மட்டுமின்றி அவரின் முன்னோர்கள் பல தலைமுறைகளாக செய்த பாவங்களும் தீர்ந்து அவர்களின் ஆன்மா நற்கதி அடையும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். பிரச்சினைகள், திருமண தடை போன்ற தடைகள், தோஷங்கள் நீங்கும். குலம் செழிக்கும். குழந்தை பேறு உண்டாகும், நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.

Also Read
சர்வ அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
தர்ப்பணம்

மாசி அமாவாசை நாளில் நதிகளின் கரையில் தெய்வங்களும் வசிக்கின்றனர். 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது அனைத்து பாவங்களையும் போக்கும் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் அன்று தர்ப்பணம் கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மன மகிழ்ச்சியை தருவதோடு தானதர்மம், உணவு, தண்ணீர் ஆகியவற்றை தானம் செய்தால் பல ஆண்டுகள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com