மயிலாடுதுறை: நல்லாடை அக்னீஸ்வரர் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு!

மூலவர் அக்னீஸ்வரர் மற்றும் அம்பாள் சுந்தரநாயகி சன்னதிகளில் அவர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை: நல்லாடை அக்னீஸ்வரர் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு!
வெளிநாட்டு பக்தர்கள்
Published on: 

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவிலில் கஜகஸ்தான் மற்றும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆன்மீக சுற்றுலா

தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த கஜகஸ்தான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர், நேற்று (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட நல்லாடை அக்னீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பாரம்பரிய முறைப்படி வெள்ளைத் துணியால் தலைப்பாகை கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாஷ்டாங்க நமஸ்காரம்

அதனைத் தொடர்ந்து மூலவர் அக்னீஸ்வரர் மற்றும் அம்பாள் சுந்தரநாயகி சன்னதிகளில் அவர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் போது, சில வெளிநாட்டு பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் மண்டியிட்டும், சாஷ்டாங்கமாக நிலத்தில் விழுந்து நமஸ்காரம் செய்தும் மனம் உருகி வழிபட்டனர்.

பரணி நட்சத்திரம்- பரிகாரத் தலம்

சுமார் 900 ஆண்டுகள் பழமையான இக்கோவில், 27 நட்சத்திரங்களில் ஒன்றான பரணி நட்சத்திரத்திற்கு உரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு வெளிநாட்டு பக்தர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி உடை அணிந்து, மனம் உருகி வழிபாடு செய்தது உள்ளூர் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X