மெலட்டூர் விநாயகர் கோவில் தேரோட்டம்: ஏராளமான பெண்கள் தேர் இழுத்தனர்

சுவாமி தெட்சணாமூர்த்தி விநாயகர் விஷேச அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
சுவாமி தெட்சணாமூர்த்தி விஷேச அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்து விநாயகப் பெருமானை வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
Related Tags :
Next Story






