

* புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், ஆன்மிக பலம் அதிகரிக்கும்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் வீடு கட்டும் கனவு நனவாகும், விரைவில் திருமணம் நடந்தேறும்.
* சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமியை வழிபட்டால் கடன் தொல்லைகள் தீரும், கஷ்டங்கள் விலகி இனிய வாழ்வு அமையும்.
* திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண் முருகனை ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
* நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கழி சுப்பிரமணியரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும்.
* சுவாமிமலை முருகப் பெருமானை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகளில் சிறந்து விளங்கலாம்.
* ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து இறைவனை வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும்.
* தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி குமாரசுவாமியை தொடர்ந்து மூன்று வளர்பிறை சஷ்டி திதிகளில் பதினோரு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* குழந்தைகளுக்கு பேச்சு குறைபாடு இருந்தால், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு தேனும், தினை மாவும் வைத்து பூஜை செய்து, அவற்றை அருட்பிரசாதமாக அந்த குழந்தைகள் சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத் திறன் வருவதாக கூறப்படுகிறது.