முத்துமாலைபுரம் ராமசாமி மற்றும் காளியம்மன் கோவில் கொடை விழா


முத்துமாலைபுரம் ராமசாமி மற்றும் காளியம்மன் கோவில் கொடை விழா
x

திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

தென்காசி

பாவூர்சத்திரம் அருகில் உள்ள முத்துமாலைபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசாமி மற்றும் காளியம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராமசுவாமி, சீதை, லட்சுமணன் மற்றும் காளியம்மனுக்கு கண் திறப்பும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலையில் சுமங்கலி பூஜை, கும்மி பாட்டு மற்றும் மகேஸ்வரி குழுவினரின் வில்லிசை நடைபெற்றது,

தொடர்ந்து தோரணமலை முருகன் கோவிலில் 61-ம் ஆண்டு இறைபணி செய்து வரும் கே.ஆதிநாராயணன் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை தொழிலதிபர் சுந்தர சுரேஷ் ஸ்ரீ ராமர் சுவாமிக்கு வெள்ளி கிரீடம் வழங்கினார்

2ம் நாளான இன்று (திங்கள்) மாலை காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து தோரணமலை பரம்பரை அறங்காவலர் தெய்வத்திரு ஆதிநாராயணன் சந்திரலீலா நினைவு மாலை நேர படிப்பக மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

3ம் நாளான நாளை (செவ்வாய்) மாலை குற்றாலத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்வுகளாக, நாளை மறுநாள் (புதன்) மதியம் பக்தர்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து கிடா வெட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

1 More update

Next Story