

நாகை,
நாகை மாவட்டம் வாய் மேட்டை அடுத்த அண்ணாபேட்டை கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காமாட்சியம்மன் குதிரை வாகனத்தில் வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்குவளைகட்டளை பகுதியின் சார்பில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
மேளதாளம், வாண வேடிக்கைகள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான பத்ர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.