

திட்டச்சேரி,
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், புத்தகரம் ஊராட்சி, நெடுஞ்சேரி கிராமத்தில் கஸ்தூரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவானது, பந்தகால் முகூர்த்தம், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.