மூலஸ்தானத்தில் பெருமாளை வணங்கும் நந்தி, பிரம்மா.. நந்திபுர விண்ணகரம் கோவிலின் சிறப்பு

ஜெகந்நாதப் பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில், பெருமாளை வணங்கிய நிலையில் நந்தியும், பிரம்மாவும் காட்சி தருகிறார்கள்.
நந்திபுர விண்ணகரம் ஜெகந்நாதப் பெருமாள் கோவில்
நந்திபுர விண்ணகரம் ஜெகந்நாதப் பெருமாள் கோவில்
Published on

கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்) ஜெகந்நாதப் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரின் திருநாமம் சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் திருநாமம் ஜெகந்நாதப் பெருமாள்.

மூலஸ்தானத்தில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். நந்தி பகவான் இங்கு அதிகார நந்தியாக தியான நிலையில் காணப்படுகிறார்.

இந்த திவ்ய தேசத்தில் வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் தடைகள் நீங்கி, குடும்ப அமைதி பெருகும், பாவங்கள் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com