

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையம் சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் தை மாத ஏகாதசியை முன்னிட்டு சீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துளசி மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குட்டக்கடை -புன்னம் செல்லும் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவிலில் தை மாத ஏகாதசியை முன்னிட்டு அனுமந்தராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் தை மாத ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.