கரூர் தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம்

ஏராளமான பெண்கள் பால்குடம் கொண்டு வந்து பாலாபிஷேகம் செய்தனர்.
கரூர்
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் உள்ள மலையம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பாலாபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பால் குடங்களில் இருந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலையம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






