பங்குனி உத்திர திருவிழா: வேளிமலை முருகன் கோவிலில் பாரம்பரிய குறவர் படுகளம் நிகழ்ச்சி

அவர்களுடன் சண்டையிட்டு வெற்றிபெற்ற முருகன் தனது உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடித்துக் காட்டப்பட்டன.
பங்குனி உத்திர திருவிழா: வேளிமலை முருகன் கோவிலில் பாரம்பரிய குறவர் படுகளம் நிகழ்ச்சி
Published on

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைபெற்றது.

முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தையொட்டி, பாரம்பரிய குறவர் படுகளம் நிகழ்வு நடைபெற்றது. நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தையொட்டி, பாரம்பரிய குறவர் படுகளம் நிகழ்வு நடைபெற்றது.

வள்ளியுடன் முதியவர் வேடத்தில் செல்லும் முருகப்பெருமானை, வள்ளியின் உறவினர்களான குறவர்கள் தடுப்பதும், அவர்களுடன் சண்டையிட்டு வெற்றிபெற்ற முருகன் தனது உண்மையான உருவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடித்துக் காட்டப்பட்டன. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com