

பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு பங்குனி மாத அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்திவேலூர் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் பழைய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர்,
பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோவிலில் உள்ள பாணலிங்கேஸ்வரர், வெங்கரையில் உள்ள ஜலகண்டேஸ்வரர்,
ஜேடர்பாளையத்தில் உள்ள ஆனந்த ஈஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.