பரமத்திவேலூர்: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நன்செய் இடையாறு கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர்
நன்செய் இடையாறு கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர்
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பிராந்தியத்தில் உள்ள 34.5 அடி உயர முள்ள ஆறுமுகம் சாமி, பொத்தனூரில் உள்ள பச்சமலை முருகன் கோவில் உள்ள பால தண்டாயுதபாணி சாமி, பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர்,

அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல்வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரம ணியர் நன்செய் இடையாறு காவிரி கரையில் உள்ள சுப்பிரமணியர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், மற்றும் ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன்,

பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com