

பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு பூஜைகளில் கோப்பணம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதே போல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவில், பரமத்தி அங்காளம்மன் கோவில், நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில், பரமத்தி வேலூரில் உள்ள புது மாரியம்மன், மகா மாரியம்மன், பகவதியம்மன், பொத்தனூரில் உள்ள பகவதியம்மன் மற்றும் மகா மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில்‘, குன்னத்தூர் செல்லாண்டி அம்மன் கோவில்,
அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.