

பரமத்திவேலூர்,
சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி ,மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர்- மோகனூர் சாலையில் எல்லை மேட்டில் உள்ள இரட்டை ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்வர்ண ஆகர்சன பைரவர், நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில் , பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்,
மாவுருட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவில், வல்லப விநாயகர் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.