

சென்னை,
திருப்பரங்குன்றத்தில் தீபாவளி இரவில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி, கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருப்பார்கள்.
இந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி திருநாளான நவம்பர் 8-ஆம் தேதி அன்று இரவில், பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் தங்கி விரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தீபாவளி நாளன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி நாளில் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தங்கி விரதம் இருக்க திட்டமிடும் பக்தர்கள், தங்களது தங்குமிட வசதிகளை கோவில் வளாகத்திற்கு வெளியிலோ அல்லது மதுரையின் பிற பகுதிகளிலோ முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.