பொங்கல் திருவிழா.. சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த பெருந்துறை கோட்டை மாரியம்மன்

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர்.
பொங்கல் திருவிழா.. சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த பெருந்துறை கோட்டை மாரியம்மன்
Published on

பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் மற்றும் முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இன்று காலையிலிருந்தே பெருந்துறை பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இன்று மாலை சலங்கை ஆட்டம், வள்ளி- கும்மி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com