ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை பேட்டை உற்சவம்
கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தில் நாளை காலையில் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பேட்டை உற்சவம் நாளை கொண்டாடப்படுகிறது. கோவிலில் இருந்து கோதண்டராமர், சீதா, லட்சுமணர் ஆகிய உற்சவர்கள் திருப்பதியை அடுத்த கூப்புசந்திரபேட்டை கிராமத்துக்கு செல்கின்றனர்.
நாளை காலை கோவிலில் இருந்து மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டு திருப்பதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தைச் சென்றடைகிறார்கள். காலை 9.30 மணியளவில் ஊர்வலம் அங்கு சென்றடைகிறது. பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
அதன் பிறகு மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை உஞ்சல் சேவையும், அதனைத் தொடர்ந்து கிராமோற்சவமும் நடத்தப்படும். பின்னர் உற்சவர்கள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

