கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

சிறப்பு வழிபாட்டில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் ஆவணி பௌர்ணமியையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். பின்னர் சந்திர கிரகணத்திற்காக மதியம் 2 மணி முதல் கோவில் நடை சாத்தப்பட்டது. இரவு வரை கோவில் திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் திரளான பக்தர்கள் கோவில் முன்பிருந்து கிரிவலம் புறப்பட்டனர். இதை கோவில் பௌர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story