சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

நாகை காயாரோகண சுவாமி கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் நந்தியம்பெருமான் (இடம்: நாகை காயாரோகண சுவாமி கோவில்)
சிறப்பு அலங்காரத்தில் நந்தியம்பெருமான் (இடம்: நாகை காயாரோகண சுவாமி கோவில்)
Published on

நாகப்பட்டினம்,

பிரதோஷ தினமான இன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜைள் நடைபெற்றன. நாகை காயாரோகண சுவாமி கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பச்சரிசி பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

அதேபோல் மலையீஸ்வரன் கோவில், அமரநந்தீஸ்வரர், மெய் கண்ட மூர்த்தி கோவில், அழகிய நாதர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், சொக்கநாதர் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில், வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோயில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com