புகழூர்: ஐயப்பன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புகழூர்: ஐயப்பன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
Published on

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுவாமி ஐயப்பனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com